×

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியீடு: தொடர்ந்து 4வது முறையாக முதலிடம் பிடித்து இந்தூர் அசத்தல்!

புதுடெல்லி: இந்தியாவின் தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், தொடர்ந்து 4வது முறையாக முதலிடம் பிடித்து இந்தூர் அசத்தியுள்ளது. இந்தப் பட்டியல் ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டு வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பெருமையை இந்தூர் நகரம் பெற்றுள்ளது. அதேவேளையில், கொல்கத்தா நகரம் தூய்மையில் மிகவும் பின் தங்கியுள்ளது. 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களின் பட்டியலில் போபால் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது காலாண்டில் ராஜ்கோட் இரண்டாம் இடம் பிடித்தது.

முதல் காலாண்டில் நவி மும்பை இரண்டாவது இடத்தையும், சூரத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இரண்டாவது காலாண்டில், வதோதரா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கன்டோன்மென்ட் போர்டு பிரிவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. ஜான்சி கன்ட் போர்டு மற்றும் ஜலந்தர் கண்ட் போர்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளது. தூய்மை அற்ற கன்டோன்மென்ட் பிரிவில் செகந்திரபாத் நகரம் உள்ளது. ஆனால், தூய்மை நகரங்களின் பட்டியலில் டெல்லியும் பின் தங்கியுள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முதன்மை இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Indore ,cities ,India , India, cleanest cities, Indore
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை...