×

டாப் words

நன்றி குங்குமம் முத்தாரம்

வருடா வருடம் ஆக்ஸ்போர்டு  டிக்‌ஷனரி மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட புதிய வார்த்தையை அல்லது வார்த்தையை கண்டு பிடித்து வெளியிடும். இந்த வகையில் 2019-ம் ஆண்டின் வார்த்தையாக `Climate Emergency’ என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது. இயற்கை மற்றும் அதன் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பால், பல இடங்களில் `Climate Emergency’- ஐ சந்திக்க வேண்டி வந்தது. செப்டம்பர் மாதத்திற்குள்ளேயே அந்த வார்த்தை 100-க்கும் அதிக தடவை பயன்படுத்தப்பட்டுவிட்டதாம்.கடந்த சில ஆண்டுகளின் வார்த்தைகளையும் பார்ப்போமா...

`Toxic’ (நச்சு)

2018-ல் இந்த வார்த்தை, மற்ற முந்தைய வருடங்களை விட இலக்கியம் மற்றும் உருவகப் படுத்தும் விஷயங்களிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டது. 10 பிரபலமான டாக்சிக் வார்த்தைகள்! அமிலம், ஆண் மைத்தன்மை, பொருள், வாயு, சுற்றுச்சூழல் உறவு, கலாச்சாரம், குப்பை, கடற்பாசி மற்றும் காற்று சார்ந்து இணைக்கப்பட்டது.

Youthquake

2017-இல் அதிகமாக புழங்கப்பட்ட வார்த்தை இது. கலாச்சாரம்,அரசியல் மற்றும் சமூகங்களில், இளைஞர்களின் எழுச்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் அதிகம்.  Antifa, broflake  மற்றும் Gorpcore போன்ற வார்த்தைகளும் இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்டன. இருந்தும் இவற்றை `Youthquake’ வென்று விட்டது.

2016-ம் ஆண்டின் வார்த் தை Post-truth.  பிரெக்சிட், டொனால்ட் டிரம்ப் போன்ற வற்றின் பாதிப்பு; இந்த வார்த்தை பிரபலமாக  காரணமாயிற்று.
2015-ம் ஆண்டு தேர்வு பெற்றது ஒரு வார்த்தையல்ல. மாறாக Icon உருவம்...! இதனை இமோஜி (Emoji)  என அழைப்பர். இதனை, ஆனந்தக் கண்ணீரைப் பிரதிபலிக்கும் உருவம் எனக் கூறுவர். 2014-ஐ விட மூன்று மடங்கு இது அதிகம் பயன்படுத்தப்பட்டதாம். அதனால்தான் இது தேர்வு செய்யப்பட்டதாம்.

Tags : Top words
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்