×

பெரம்பலூரில் கைரேகை வைத்த வாக்குகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்களிடையே கூச்சல் குழப்பம்

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டத்தில் பலர் வாக்குப்பதிவு முத்திரைக்கு பதில் கைரேகையை வைத்து வாக்களித்துள்ள  நிலையில் அந்த வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூச்சல் குழப்பம் நிலவுகிறது.  பெரம்பலூர் ஊராட்சி மாவட்டத்தில் பெரம்பலூர்,  வேப்பந்தட்டை,  ஆலத்தூர்,  வேப்பூர் ஆகிய  4  ஊராட்சி  ஒன்றியங்கள் உள்ளது.  இந்த 4 ஊராட்சி ஒன்றியங்களில் 121 ஊராட்சி மன்ற தலைவருக்கும்,   76  ஒன்றிய குழு உறுப்பினருக்கும்,  8 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கும், 1032 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும்,  என மொத்தம் 1237 பதவியிடங்கள் இருக்கிறது.  இதில் 5 ஊராட்சி மன்றத் தலைவர்களும்,  218 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும்,  என மொத்தம் 223 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். 

மீதமுள்ள 1016 பதவியிடங்களுக்கு 3111 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர்.  கடந்த 27-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும்,  அதனை தொடர்ந்து 30-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைப்பெற்றது.  இந்த வாக்குகள் அனைத்தும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள தனியார் பள்ளி மற்றும் அரசு மேல் நிலை பள்ளியில் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைக்கு காலையில் 8 மணியளவில் தொடங்கியது வாக்குப்பதிவு.  பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ்  பெரம்பலூர் அரசு உயர்நிலை பள்ளியிலும்,  வேப்பந்தட்டை ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை உடும்பியம்  தனியார் பள்ளியிலும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை பாடாலூர் அரசு மேல்நிலை பள்ளியிலும்,  வேப்பூர் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை அங்குள்ள அரசு மகளிர் கலைக்கல்லுரியிலும் எண்ணப்பட்டு வருகிறது.   இதுவரை பெரம்பலூரில்  4 மாவட்ட கவுன்சிலர் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். 

ஒரு அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருக்கின்றனர். மேலும் ஒன்றிய கவுன்சிலர் மாவட்டம் முழுக்க 10-க்கும் மேற்பட்ட திமுக வேட்பாளர் முன்னிலையில் இருக்கின்றனர்.  மேலும் மாவட்டம் முழுக்க 5  அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருக்கின்றனர். வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மேல்நிலை பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது போதிய விழிப்புணர்வு இல்லாததால் அந்த வாக்கு முத்திரைக்கு பதிலாக கைரேகையை பதிவு செய்து வாக்களித்துள்ளனர்.  இந்த வாக்குகள் செல்லாது என வாக்கு எண்ணிக்கை அலுவலர் தெரிவித்ததால் அங்குள்ள வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கூச்சலிட்டனர்.  இதனால் பரபரப்பு நிலவியது.  இதனை தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொள்ளவந்த பெரம்பலூர் மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் மற்றும் மாவட்ட கலட்டர் வே.சாந்தா ஆகியோர் வந்து சமாதானம் செய்து வைத்தனர்.


Tags : fingerprint vote ,announcement ,Perambalur , Perambalur, fingerprint, votes, shouting, confusion
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்