×

திமுக வெற்றி பெற்றுள்ள பல இடங்களில் முடிவை அறிவிக்காமல் தாமதம் : மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்த பின் ஸ்டாலின் பேட்டி

சென்னை : சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் புகார் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குஎண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும் புகார் கூறினார். ஸ்டாலினுடன்திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலுவும் சென்றனர். சேலம் மாவட்டத்தில் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஆகுவது குறித்தும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற்று இருப்பதை அறிவிக்கவில்லை என்றும் ஸ்டாலின் பழனிசாமியிடம் குற்றம் சாட்டியுள்ளார்.  

இதையடுத்து மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்த பின் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பல மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெரிய வெற்றியை எதிர்நோக்கி உள்ளனர். திமுக அணியின் வெற்றியை தடுக்க ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் சதி செய்து வருகின்றனர். அதிமுக வெற்றியை மட்டும் அறிவித்துவிட்டு திமுக வெற்றியை அதிகாரிகள் அறிவிக்காமல் சென்று விட்டனர்.

சேலம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை அதிகாரிகள் அறிவிக்கவில்லை.தூத்துக்குடி பூதலூரில் திமுகவினரை அடித்து விரட்டிவிட்டு வாக்கு எண்ணுகின்றனர்.விளாத்திக் குளத்தில் 3 வாக்குப்பெட்டிகள் காணவில்லை என செய்தி வந்துள்ளது. ஆளுங்கட்சியினர், அதிகாரிகளின் தவறுகளை மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் பற்றி நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று கூறினார்.  


Tags : delay ,DMK ,places ,announcement ,areas ,Stalin Stalin ,victory , Election Commissioner, Palanisamy, MK Stalin, DMK, Local Elections, Delay
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...