×

ராமானுஜபுரத்தில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா?.... மக்கள் எதிர்பார்ப்பு

பாபநாசம்: கும்பகோணம்- திருவையாறு சாலையில் கபிஸ்தலத்தை அடுத்துள்ளது ராமானுஜபுரம். இந்த பகுதி மெயின் சாலையில் இருந்து இந்த ஊருக்குள் செல்லக்கூடிய ராமானுஜபுரம் வாய்க்கால் மீது சிறுபாலம் 1955ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலமானது பழமையானது என்பதால் அடிக்கடி உள்வாங்கி விடுகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்லும்போது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இதேபோன்று மற்றொரு பாலமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மேலும் இந்த பகுதியில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. இந்த பகுதியில் ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்ததால் மழைநீர் கசிந்து வருகிறது. எனவே கட்டிடத்தின் மேற்கூரை மீது தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர். எனவே இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். சிறுபாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

Tags : ration shop building ,Ramanujapuram , Ramanujapuram, ration shop
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்