×

90 நாட்களுக்கும் மேலாக நிரம்பி வழியும் சோத்துப்பாறை: பெரியகுளம் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் பெய்த தொடர் மழையால் சோத்துப்பாறை அணை முழுவதும் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து 90 நாட்களுக்கும் மேலாக நிரம்பி வழிவதால் தாமரைக்குளம், பாப்பையன்பட்டி, பெரியகுளம் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும். கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
தற்போது கடந்த சில நாட்களாக மழை இன்றி சோத்துப்பாறை அணையில் நீர்வரத்தின்றி வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் தற்போது தொடர்ந்து பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து துவங்கியது. 90 நாட்களுக்கும் மேலாக அணையின் முழு கொள்ளளவான 126 அடியும் நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து 27 கன அடியாகவும், நீர் இருப்பு 126.28 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 100.27 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தற்போது அணைக்கு வரும் 27 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேறுகிறது. இது தவிர அணையிலிருந்து குடிநீருக்காக 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணையிலிருந்து நீர் நிரம்பி வழிவதால் தாமரைக்குளம், பாப்பையன்பட்டி, பெரியகுளம் கண்மாய்கள் நிரம்பி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Chottapuram, Periyakulam and the farmers are happy
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!