×

திருத்துறைப்பூண்டி அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சுற்றுச்சுவரால் ஆபத்து: இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சுற்றுச்சுவரை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடி கிராமத்தில இந்து சமயஅறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொத்துகள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைபூச நாளில்தான் திருவிழா நடைபெறும். தற்போது கோயில் பராமரிப்பு இல்லாமல் கோயில் முழுவதும் பல்வேறு செடி கொடிகள் மண்டி கிடக்கிறது. சுற்று சுவர் பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. எந்த நேரத்திலும் விழும் என்றும் சுற்று சுவர் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோயிலலின் 15 அடி உயரம் உள்ள சுற்றுச்சுவர் இடித்து விழுந்ததில், கடந்த மாதம் 26ம் தேதி கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற மெய்காவலர் மாரியப்பன் பலியானார்.பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றி இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது. எனவே பழுதடைந்த கோயில் சுற்றுச் சுவரை உடனே இடித்து அப்புறப்படுத்த வேண்டும். கோயில் திருப்பணியை விரைவில் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் சுரேந்தர் கூறுகையில், பழையங்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டு மேல் இருக்கும். இந்த கோயிலுக்கு 200 ஏக்கர் சாகுபடி நிலம் உள்ளது. இப்படி வருமானம் உள்ள கோயில் இப்படி கிடக்கிறது. சொத்துக்கள் இல்லாத கோயில்கள் நல்ல முறையில் உள்ளது. எனவே இந்த சிவன் கோயில் திருப்பணி வேலைகள் விரைவில் செய்ய வேண்டும் என்றார்.

பொதுமக்கள் கூறுகையில், கோயில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற மெய்காவலர் மாரியப்பன் கடந்த 26ம் தேதி கோயில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி விட்டார். ஆனால் இதுவரை தாசில்தாரோ, கோயில் செயல் அலுவலரோ வந்து மாரியப்பன் குடும்பத்துகு ஆறுதல் கூறவில்லை. அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் இன்னும் உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் வந்து ஆய்வு நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags : Old Temple Roundup ,temple ,Demolish Thiruthuraipoondi ,Thirupuraipoondi ,demolition , Thiruthuraipoondi, Temple
× RELATED சம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்