×

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : தி.மு.க கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

சென்னை,: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.. ஓட்டுப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் தேர்தல்(515) : தி.மு.க+ - 63 அ.தி.மு.க+ - 54

ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்(5090) : தி.மு.க+ - 117 அ.தி.மு.க+ 115
 
இதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் பின்வருமாறு;

* கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய 1-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் அருண்காந்த் வெற்றி பெற்றுள்ளார்.

* தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றிய 1-ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் செழியன் வெற்றி பெற்றுள்ளார்.

* தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் 2ஆவது வார்டில் அமமுக வேட்பாளர் சவிதா ரமேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

* விராலிமலை ஒன்றிய 3-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார்.

* தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றிய முதல் வார்டில் திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி பெற்றுள்ளார்.

* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியக்குழு 1வது வார்டில் தி.மு.க வேட்பாளர் ரமேஷ் வெற்றி!

* கன்னியாகுமரி மாவட்டம்மேல்புறம் ஒன்றியக்குழு 1வது வார்டில் காங். வேட்பாளர் ஞான சவுந்தரி வெற்றி!

* தஞ்சாவூர் மாவட்டம் ​பட்டுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் ரமாதேவி வெற்றி.

* விருதுநகர் ஒன்றியம் முதலாம் வார்டில் தி.மு.க வேட்பாளர் ஷோபனா வெற்றி

* புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ராசப்பன் வெற்றி. ஒன்றியக் கவுன்சிலர் 5-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கல்யாணி வெற்றி.

* சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியம் நாகலூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு திமுக பிரமுகர் கண்ணன், 1494 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக பிரமுகர் சுரேசுக்கு 1021 வாக்குகள் கிடைத்தன.

* தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் 1வது வார்டு ஒன்றியம் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக சம்பத் வெற்றி.

* சுல்தான்பேட்டை ஒன்றியம் 1வது வார்டு  உறுப்பினர் பதவியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் விஜயக்குமார் வெற்றி.

Tags : alliance ,Rural Local Elections ,DMK ,Elections , Local elections, ballot counting, DMK alliance, frontline!
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு