×

மத்திய அரசின் 2020-ம் ஆண்டுக்கான காலண்டரில் இந்தியாவின் கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள்

டெல்லி: மத்திய அரசின் 2020-ம் ஆண்டு காலண்டரில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ காலண்டரை வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி 2020-ம் ஆண்டுக்கான காலண்டரை மத்திய அரசு வெளியிட்டது. அதில் பல்வேறு இந்திய கலாச்சார படங்கள் இடம்பெற்றன, மேலும்  மத்திய அரசின் திட்டங்கள், மக்களை ஊக்கப்படுத்தும் வாசகங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு மாதத்துக்கான காலண்டரிலும் பிரதமர் மோடியின் முக்கியமான திட்டங்கள், மக்களுக்கான அதிகாரம், மக்களின் பங்களிப்பு, குறிப்பாக இளைஞர்களின் கடமை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முக்கிய திட்டங்களான ஸ்வச்பாரத், ஏக்பாரத் ஸ்ரத்ரா பாரத் திட்டம் போன்றவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலண்டரில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வாசகங்கள் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதின் முக்கியத்துவ கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பிரதமர் மோடி, சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் சுற்றுப்பயணம் சென்றபோது கடற்கரையில் உலாவும் காட்சி மற்றும் அவர் வேட்டி சட்டையில் இருக்கும் முழு படக்காட்சி ஆகியவையும் காலண்டரில் இடம்பெற்றிருக்கிறது. இன்னொரு படத்தில் ராணுவ வீரர் ஒருவருக்கு குழந்தை சல்யூட் அடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. நீர் சேமிப்பின் அவசியம் தொடர்பான காட்சிகளும் அதில் உள்ளன.

Tags : Mamallapuram ,Central Government ,India ,government , Various views , central government, calendar , 2020, Mamallapuram
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ