×

டாக்டர் பட்டத்தை தொடர்ந்து விருது: ஹலோ எப்.எம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமை விருது வழங்கப்பட்டது

சென்னை: ஹலோ எப்.எம் (Hello FM) என்பது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒலிபரப்படும் பண்பலை வானொலி நிலையம் ஆகும். இது சென்னையைச் சேர்ந்த மலர் பதிப்பகம் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. அதிர்வெண் பட்டை  106.4 MHz ஐ பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.2006-ம் ஆண்டு முதல் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகிறது. 2007-ம் ஆண்டில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் மற்ற நகரங்களான மதுரை, திருச்சி,  திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடியிலும் இதன் சேவையை விரிவுப்படுத்தியது. தற்போது, சேலம், ஈரோடு, வேலூர் மற்றும் துபாயிலும் ஹலோ எப்.எம் ஒலிபரப்படுகிறது.

இதற்கிடையே, ஹலோ எப்.எம் சார்பில் அவப்போது பல விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஹலோ எஃப்எம் சார்பில் சிறந்த  அரசியல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின் அதிமுக கட்சியினை வழி நடத்தி, பல்வேறு திட்டங்களை முதல்வர் பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். கடந்த அக்டோர் மாதம் டாக்டர்.எம்.ஜி.ஆர்.  கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Dr. ,Hello FM , Dr. Palanisamy Awarded Best Political Personality Award on behalf of Hello FM
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!