×

புத்தாண்டு விடுமுறையை கொண்டாட தேக்கடி, வாகமண்ணில் அலைமோதும் கூட்டம்

கூடலூர்: புத்தாண்டு விடுமுறைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி, வாகமண்ணில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கேரள மாநிலம், தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் ஏராளமாக வருவதுண்டு. தேக்கடியில் யானை சவாரி, டைகர்வியூ, நேச்சர்வாக், பார்டர்வாக், மூங்கில் படகு சவாரி என சுற்றுலாப்பயணிகளை கவரும் பலபொழுதுபோக்கு விஷயங்கள் இருந்தாலும், படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம் என்பதால், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விருப்பத்தில் படகுச்சவாரி முதலிடம் வகிக்கிறது.

புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் தேக்கடியில் குவிந்துள்ளனர். தேக்கடியில் நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிம் பேர் மட்டுமே படகுச்சவாரி செல்ல முடியும் என்பதால், சுற்றுலாப்பயணிகள் படகுத்துறையில் காத்துக்கிடக்கின்றனர். அதுபோல் இடுக்கி மாவட்டம், ஏலப்பாறை அருகே கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வாகமண் பகுதியில் கேரள வனத்துறையும், சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதால் இங்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தற்கொலை விளிம்பு, மொட்டைக்குன்று, பைன் மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம், குரிசுமலை, முருகன்மலை ஆகியவைகளை கண்டு ரசித்து, வாகமன் ஏரியில் பெடல் போட்டில் சவாரி செய்கின்றனர்.

அதேபோல இடுக்கி மாவட்டம், சிறுதோணியில் 555 உயரத்திற்கு கட்டப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய ஆர்ச்டேமான இடுக்கி அணையை பார்வையிடவும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்தி மலையையும் இணைத்து கட்டப்பட்டுள்ள இந்த அணையில் சுற்றுலாப்பயணிகள் திரில்லான படகுச்சவாரி செய்தனர்.

Tags : holidays ,Meeting ,Thekkady ,Wagamon , New Year holidays, Thekkady
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்