×

புத்தாண்டுக்கு சிறப்பு ஏற்பாடு இல்லை திருப்பதியில் வழக்கம்போல் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன் புத்தாண்டையொட்டி பக்தர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். யுகாதி எனப்படும் தெலுங்கு புத்தாண்டையே தெலுங்கு பேசும் மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும், ஆந்திராவில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான சிறப்பு முன்னேற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டாம் என ஆந்திர அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. அதன்படி, 2020 ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. வழக்கம் போலவே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும் புத்தாண்டையொட்டி கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் நேற்று ஏழுமலையான் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம், அலிபிரி மற்றும் வாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசனம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்களுக்கான தரிசனமும் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் இலவச தரிசனத்தில் எப்போதும் போலவே ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே அதிகாலை 2 மணியளவில் மார்கழி மாத பூஜைகள் நடைபெற்றது. 3  மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை விஐபி புரோட்டோக்கால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 4 மணியளவில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்கில புத்தாண்டையொட்டிபக்தர்கள் கோயில் முன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Tags : New Year ,darshan , New Year, no special arrangement, as usual, darshan
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!