×

அதிராம்பட்டினத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த ஆதரவற்ற இந்து மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்கள்

அதிராம்பட்டினம்: உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த ஆதரவற்ற இந்து மூதாட்டி உடலை இஸ்லாமியர்கள் நல்லடக்கம் செய்தனர். அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி (75). இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். தேவிக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அவரது உடலை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதையறிந்த அதிராம்பட்டினம் கிரசன்ட் பிளட் டோனட் அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் செய்யது அகமது கபீர் ஆரிப் மற்றும் நைனா, ஹஸன் ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அந்த மூதாட்டியின் உடலை பெற்று அந்த மூதாட்டி இந்து மதத்தை சோ்ந்தவர் என்பதால் இந்து முறைப்படி இறுதி சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர். இது அதிராம்பட்டினத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Tags : Islamists ,Adirampattinam ,Patriarch ,Supporters , supporters of Hindu patriarch, body of Islamists
× RELATED தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை