×

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை: ‘மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்’

பாக்தாத்; ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதற்கு  அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத முகாம்கள் மீது கடந்த ஞாயிற்றுகிழமை அமெரிக்க விமானப்படை வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராக்கில் உள்ள ஈரான் சார்பு போராட்டக்காரர்கள் இதை கண்டித்து, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்்கி நேற்று முன்தினம் பேரணியாக சென்றனர். அப்போது, ‘அமெரிக்காவுக்கு மரணம்’, ‘அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும்’ என முழக்கமிட்டபடி சென்றனர். பாதுகாப்பு எல்லையை கடந்து சென்ற அவர்கள் அமெரிக்க தூதரகத்தை தாக்கி சூறையாடினர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

 இந்த தாக்குதலுக்கு  கண்டனம் தெரிவித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ேநற்று முன்தினம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `அமெரிக்க படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டாலோ அல்லது அமெரிக்காவின் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கான தண்டனையை ஈரான் தான் அனுபவிக்க வேண்டும். இதற்காக, அது மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். இது எனது எச்சரிக்கை அல்ல. எனது மிரட்டல். ’ என கூறியுள்ளார்.இந்நிலையில், போர்வெறியை தூண்டும் விதமான  அமெரிக்காவின் பேச்சுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் தங்கள் நாட்டு விவகாரங்களை கவனிக்கும் சுவிட்சர்லாந்து தூதரகத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதில்,  ஐநாவின் கொள்கையை மீறி செயல்பட்ட அமெரிக்காவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.


Tags : embassy ,Iraq ,US ,Iran , Trump warns,Iran ,US embassy ,looting ,Iraq
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...