×

கேன் வில்லியம்சன் தனித்துவமான வீரர்...

புதுடெல்லி: ஐசிசி யு-19 உலக கோப்பையில் விளையாடியபோதே நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தனித்துவமான திறமை கொண்ட பேட்ஸ்மேனாக முத்திரை பதித்தார் என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பாராட்டி உள்ளார்.தென் ஆப்ரிக்காவில் யு-19 உலக கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த கேப்டன் கோஹ்லி இது குறித்து கூறியதாவது: ஐசிசி இளைஞர் உலக கோப்பை என் கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியமான மைல்கல் ஆகும்.

அந்த தொடரில் விளையாடிய ஜடேஜா, போல்ட், சவுத்தீ, கேன், ஸ்மித் போன்றவர்கள் தங்களின் தேசிய அணிக்காக பெரிய அளவில் சாதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, 2008 உலக கோப்பையில் கேன் வில்லியம்சன் தனித்துவமான திறமை மிக்க பேட்ஸ்மேனாக அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். அந்த தொடரின் நினைவுகள் என்றென்றும் பசுமையாக நிலைத்திருக்கும். இவாறு கோஹ்லி கூறியுள்ளார். 2008 யு-19 உலக கோப்பையில் கோஹ்லி 235 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது (சராசரி 47.00).

Tags : Kane Williamson , Kane Williamson , unique,player
× RELATED வில்லியம்சன் 112*, ரவிந்திரா 118* நியூசிலாந்து ரன் குவிப்பு