×

குடியுரிமை போராட்டத்தில் கைதான 14 மாத குழந்தையின் தாயை விடுவியுங்கள்: பிரியங்கா கோரிக்கை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைதான 14 மாத குழந்தையின் தாயை விடுவிக்க வேண்டுமென பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 19ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, ஏக்தா - ரவிசேகர் தம்பதியினர் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். ஏக்தா - ரவி சேகர் தம்பதியினர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால், இவர்களின் 14 மாத பெண் குழந்தை பெற்றோர் இன்றி தவித்து வருகிறது.  

இது குறித்து, உபி மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மக்கள் போராட்டத்தை ஒடுக்க, பிஞ்சு குழந்தையை பெற்றோரிடம் இருந்து பிரித்து பாஜ அரசு மனித நேயமே இல்லாமல் நடந்து கொள்கிறது. குழந்தையின் உடல்நலம் பாதித்தும், பாஜ அரசின் உள்நோக்கத்தில் மாற்றமில்லை. குழந்தைக்காக அவரது தாய் வீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டியது இந்த அரசின் தார்மீக கடமை,’ என கூறியுள்ளார்.

Tags : release ,Priyanka , Priyanka,demands , mother,14-month-old,child
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்