×

2020-ம் புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்: UNICEF அறிக்கை

நியூயார்க்: புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக UNICEF (United Nations Children’s Emergency Fund) என்கிற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் 8 நாடுகளில் பிறந்துள்ளன. உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுக் கொண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில் 2020-ம் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக UNICEF அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2020 ஜனவரி 1-ம் தேதி, புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும்  சுமார் 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இதில் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிஜி தீவில் 2020-ம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. கடைசியாக அமெரிக்காவில் குழந்தை பிறந்துள்ளது. இதில் 17 சதவீதக் குழந்தைகள் இந்தியாவில் பிறந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக 67 ஆயிரத்து 285 குழந்தைகளும்,

அதைத் தொடர்ந்து சீனாவில் 46 ஆயிரத்து 299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26 ஆயிரத்து 39 குழந்தைகளும், பாகிஸ்தானில் 16 ஆயிரத்து 787 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13 ஆயிரத்து 20 குழந்தைகளும் பிறந்துள்ளன. அமெரிக்காவில் 10 ஆயிரத்து 452 குழந்தைகளும், காங்கோவில் 10 ஆயிரத்து 247 குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 8 ஆயிரத்து 493 குழந்தைகளும் பிறந்துள்ளன என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Tags : India ,UNICEF ,child births , UNICEF Report on the New Year, 2020, Child, India
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...