×

மந்தகதியில் பாலம் கட்டுமான பணியால் 4 மாதமாக குடிநீர் தேடி அலையும் பொதுமக்கள்

நாங்குநேரி: மூலைக்கரைப்பட்டி அருகே மந்த கதியில் நடைபெறும் பாலம் கட்டுமானப் பணியால், 4 மாதங்களாக அவதிப்படும் பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள், நீண்ட தொலைவுக்கு நடந்துசென்று குடிநீர் எடுத்துவரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பருத்திப்பாடு ஊராட்சி சுருளை கிராமத்தில் நீரோடை மீது சிறு பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலையில் பாலம் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இருப்பினும் கட்டுமானப் பணியானது மந்தகதியிலேயே நடந்து வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதனால் அந்த வழியாக சுருளை குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் எடுத்துச் சென்ற முக்கிய குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யவில்லை. கடந்த 4 மாதங்களாக இதேநிலை நீடிப்பதால் பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் சுமந்து வருகின்றனர். இதனால் வீட்டு வேலைகளைக் கூட முழுமையாக கவனிக்க முடியவில்லை என அப்பகுதி பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பாலப்பணிகளை விரைந்து முடித்து சுருளைக் கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Civilians , Sluggishness, bridge, construction work, drinking water
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...