×

தூத்துக்குடியில் அமைகிறது 2-வது ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்....இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

பெங்களூரு: விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 2-வது ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். சந்திராயன் -3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேர்வான விண்வெளி வீரர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  

நாட்டிலேயே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா மட்டுமே ராக்கெட் ஏவுவதற்கு அனைத்து அம்சங்களும் கொண்ட பகுதி என்பதே அதன் புகழுக்கு காரணம். தற்போது அதே வகையில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் ராகெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருப்பது ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில். இஸ்ரோவின் மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை தமிழகத்தில் அமைப்பதற்கான திட்டம் உள்ளது. அது தூத்துக்குடியில் அமைகிறது. தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். ஏவுதளத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: சந்திரயான் - 3 திட்டத்தை வடிவமைக்க இஸ்ரோ முயற்சித்து வருகிறது. சந்திரயான்- 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான் -3 லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும். சந்திரயான் -2 திட்டத்தில் லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதியதால் வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. இருப்பினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது அடுத்த 7 ஆண்டுகளுக்கு அறிவியல் தகவல்களை அளிக்கும். இவ்வாறு சிவன் கூறினார்.

Tags : Shiva ,launch ,Tuticorin ,Land acquisition ,ISRO , Thoothukudi, launch, land, ISRO, chief Shiva
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு