×

ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய போது 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்: இந்தியா தக்க பதிலடி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதியில் பாகிஸ்தானுடனான சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும்போது வீரமரணம் அடைந்தனர். உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தற்போது புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய பெரு நகரங்களில் மிகப்பெரிய அளவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்தனர். சுமார் 1 மணி நேரம் இந்த சண்டை அங்கு நடந்தது. அவர்கள் இந்திய எல்லைகளை நோக்கி சிறிய அளவிலான கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.  காஷ்மீர் மாநிலம் நவ்சேரா செக்டார் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு இந்திய ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த பகுதியில் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் இறந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இரண்டு வீரர்களும் எல்லை சண்டையில் வீரமரணம் அடைந்ததாக தகவல்கள் வந்துள்ளது. ரஜோரி அருகே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்தபோது இந்த வீரமரணம் நிகழ்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. தற்போது அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இன்றுதான் எஸ்எம்எஸ் சர்வீஸ் மீண்டும் கொண்டு வரப்பட்டது. அதேபோல் நேற்றுதான் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டார்.

Tags : soldiers ,Indian ,attack ,Pakistani ,area ,Kashmir Rajouri ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, Pakistan, Assault, Indian Army, Heroic Death
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை