×

கிழக்கு-மேற்கு திசை காற்று ஒன்றோடு ஓன்று மோதுவதால் சென்னையில் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கிழக்கு-மேற்கு திசை காற்று ஒன்றோடு ஓன்று மோதுவதால் சென்னையில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் மாலை வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை நீடிப்பதால் இன்னும் சென்னையில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது.

சென்னையில் காலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் தி.நகர், கீழ்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, தரமணி அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் திருவண்ணாமலை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கனமழை பெய்து வருகிறது.  திருவண்ணாமலையில், ஆரணி, சேவூர்,ஆதனூர், மலையாம்பட்டி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: இன்னும் நான்கு நாட்கள் வடகிழக்கு பருவமழை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தொடரும். இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. 6 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை மேலும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் மாலை வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை நீடிப்பதால் இன்னும் சென்னையில் மழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,Meteorological Center ,Meteorological Department East-West Winds Collide , East, West, Chennai, Heavy Rain, Meteorological Center
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...