×

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் SMS சேவை

காஷ்மீர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் SMS சேவை வழங்கப்பட்டுள்ளது. இணையதள சேவை மருத்துவமனைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதில் தொலைபேசி, செல்போன், இணையதள சேவை முடக்கமும் அடங்கும். பின்னர் அங்கு இயல்பு நிலை திரும்ப தொடங்கியதால் படிப்படியாக இந்த சேவைகள் திரும்ப வழங்கப்பட்டன.

Tags : Kashmir Valley , Kashmir, Valley, SMS service
× RELATED ஒரு வெள்ளை போர்வை காஷ்மீர் பள்ளத்தாக்கை அலங்கரிக்கும் காட்சிகள்..!!