×

தினகரன் வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சென்னை: தினகரன் வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2019-ம் ஆண்டு நிறைவுப் பெற்று 2020 புத்தாண்டு உற்சாகத்துடன் பிறந்தது. 2020 புத்தாண்டை வரவேற்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து வான வேடிக்கையுடன் புத்தாண்டை மக்கள் கொண்டாடி வந்தனர். ஆங்கில புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித்: புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று இந்த நன்னாளில் தமிழக மக்களை வாழ்த்துகிறேன். தெலங்கானா ஆளுநர் தமிழிசை  சவுந்தரராஜன்: 2020ம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் இன்பத்தையும், மகிழ்ச்சியையும், சுகத்தையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும். அனைவருக்கும் எனது  இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளை பெற்று, புதிய சாதனைகளை படைத்து, வளமான தமிழகத்தை படைத்திடுவோம் என நாம் அனைவரும் உறுதியேற்போம். இந்த புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அமைதி நிலவட்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மலர்கின்ற புத்தாண்டை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் கொண்டாடும் இந்த நன்நாளில் தமிழகம் வளம் பெறவும், தமிழர்கள் வாழ்வு பெறவும், தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): 2020ம் ஆண்டு பிறக்கும்போது புதிய உற்சாகமும், புத்தெழுச்சியும், அமைதியும், நல்லிணக்கமும் தழைத்து, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன். அனைத்து மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): 2020ம் ஆண்டு இனிப்பாக அமையும். அனைத்து மக்களுக்கும் நலன்களும், வளங்களும் கிடைக்கும். பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் அனைவருக்கும் கிடைக்கும்; பொய்மைகள் புறக்கணிக்கப்பட்டு, உண்மைகள் வெல்லும் என்று கூறி, அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): மதச் சார்பின்மையை பாதுகாப்போம்; அனைத்து சமயத்தினரிடமும் நல்லிணக்கத்தை வளர்ப்போம். எந்நாளும் துன்பத்தில் உழல்கின்ற விவசாயப் பெருமக்களுக்கு, வருகின்ற காலம் துயர் துடைக்கின்ற காலமாக அமையும் என்ற நம்பிக்கையோடு, உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:பழைய ஆண்டு கற்றுத்தந்த பாடங்களிலிருந்து,  புதிய ஆண்டில் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்  பழைய கவலைகளையும், மனச்சுமைகளையும் சேர்த்து பழைய ஆண்டை வழியனுப்பி வைத்துவிட்டு, புதிய கனவுகளோடு, புதிய நம்பிக்கைகளோடு புத்தாண்டை இனிதே வரவேற்போம். தொடங்கவிருக்கும் 2020 புத்தாண்டு, இனிமையாகவும், மகிழ்வாகவும் அமையட்டும் என்று வேண்டி, அனைவருக்கும் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமக தலைவர் சரத்குமார், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர், தி.க.தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் ஏ.எர்ணாவூர் நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Dinakaran ,Happy New Year , Happy New Year , readers , Dinakaran
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...