×

பாமக கூட்டணி சேராவிட்டால் அதிமுக ஆட்சி இல்லை: அன்புமணி பேச்சு

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக சார்பில், ‘2019-க்கு விடை கொடுப்போம், 2020ஐ வரவேற்போம்’ என்ற தலைப்பில் புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். நிறுவனர்  ராமதாஸ், அன்புமணி எம்.பி சிறப்புரையாற்றினர். கூட்டத் தில், ‘ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் குடிமக்கள் பதிவு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்  சட்டம் இயற்ற வேண்டும்’ என்பன உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அன்புமணி எம்.பி பேசுகையில், ‘‘பா.ம.க.வுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சி இல்லை. இடைத்தேர்தலில் பா.ம.க. வாக்குகளே அதிமுகவுக்கு வெற்றி பெற வழிவகை செய்தது. கூட்டணிக்கு போனாலும் பா.ம.க கொள்கையில் மாற்றம் இல்லை. இருந்தபோதிலும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற உதவினோம்’’ என்றார்.

Tags : AIADMK ,PA ,Anbumani ,Join The Coalition ,Dhammani Talk , If we do not join the coalition, AIADMK, there is no rule, Dhammani talk
× RELATED பா.ஜ.க.வுக்கு எதிரான புகார் மீது...