வீட்டில் கஞ்சா வைத்திருந்த மாணவர்கள் உள்பட 6 பேர் கைது

சென்னை: குரோம்பேட்டை, கணபதிபுரம், நாகாத்தம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கு 3 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, அங்கிருந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த யஸ்வந்த் ராஜா (25), புனேவை சேர்ந்த காந்த் (22), பாண்டிச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (22), அந்தமானை சேர்ந்த சதீஷ்குமார் (22), கடலூரை சேர்ந்த கவுதம் (22), தூத்துக்குடியை சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா (26) ஆகியோர் என்பதும், இதில் விக்னேஷ், கவுதம் இருவரும் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருவதும், யஷ்வந்த் ராஜா கச்சேரி பாடகர் என்பதும், இவர் மறைந்த பிரபல சினிமா பாடகர் ஒருவரின் பேரன் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் பயன்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்தனரா அல்லது மாணவர்களுக்கு விற்று வந்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ஆந்திராவில் இருந்து குட்கா கடத்தி வந்து, குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி, பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள  கடைகளுக்கு விற்பனை செய்து வந்த பம்மல், நாகல்கேணி பகுதியை சேர்ந்த  மகேஷ் (எ) மகேந்திரன் (35) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 டன் குட்காவை பறிமுதல் செய்தனர்.
* புளியந்தோப்பு குமாரசாமி ராஜாபுரத்தை சேர்ந்த விஜயா (35) நேற்று அதிகாலை ஆட்டோ ஒன்றில் சாந்தோம் சென்றபோது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தி, இவருக்கு டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
*  கே.கே.நகர் 102வது தெருவை சேர்ந்த தனியார் மருத்துவமனை மேலாளர் லதா (52) என்பவரிடம் 8 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை அழகிரி நகரை சேர்ந்த தினேஷ் (19) என்பவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.   வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோட்டில் உள்ள துணி கடையில், விலை உயர்ந்த 2 புடவைகளை எடுத்து, அதில் குறைந்த விலை ஸ்டிக்கரை ஒட்டி, பில்போட முயன்ற திருமுல்லைவாயல், லட்சுமி கோயில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Tags : home ,Six , Six arrested, including,students,cannabis, home
× RELATED மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை