கிரீஸ் எண்ணெய் கப்பல் ஊழியர் 8 பேர் கடத்தல்

ஏதென்ஸ்: கேமரூன் நாட்டின் பொருளாதார தலைநகரான டுவாலாவில் உள்ள லிம்பே துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கிரீஸ் கப்பலின் ஊழியர்கள் 8 பேர் கடத்தப்பட்டதாக இந்நாட்டு கடல் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `லிம்பே துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏதென்ஸ் நிறுவனத்தின் `ஹேப்பி லேடி’ கப்பலில் இருந்த 28 ஊழியர்களில், 5 கிரீஸ், 2 பிலிப்பைன்ஸ், 1 உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் என மொத்தம் 8 பேர் கடத்தப்பட்டுள்ளனர். கிரீஸ் நாட்டை சேர்ந்த கப்பல் மாலுமியையும் கடத்தல்காரர்கள் தாக்கி உள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>