×

சிஏஏ.வுக்கு துபாயில் எதிர்ப்பு

துபாய்: ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பேரணியாக சென்ற துபாய் வாழ் இந்தியர்கள் தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர். அதில், `இச்சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம்களை தவிர மற்ற அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதாக உறுதி அளிக்கிறது. இது சமூகத்தில் பிரிவினையை தூண்டுவதாக உள்ளது.’ என்று கூறப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற துபாய் வாழ் இந்தியர் ஒருவர் கூறுகையில், இந்தியாவில் உள்ள எனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், உபி.யில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தினால் தொலைத்தொடர்பு சேவை, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் தொடர்பு கொள்ள முடியவில்லை,’’ என்றார்.



Tags : Dubai ,CAA , Resistance,Dubai , CAA
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...