×

3 ரன் வித்தியாசத்தில் தண்டர் த்ரில் வெற்றி: ரஷித் கான் அதிரடி வீண்

அடிலெய்டு: பிக் பாஷ் டி20 லீக் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிராக 3 ரன் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணி த்ரில் வெற்றி பெற்றது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. உஸ்மான் கவாஜா 63 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் கால்லம் பெர்குசன் 73 ரன் (46 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

அடுத்து களமிறங்கிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. வெதரால்டு 52 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் அலெக்ஸ் கேரி 19, ஜொனாதன் வெல்ஸ் 26 ரன் எடுத்தனர். அதிரடியாக விளையாடி மிரட்டிய ரஷித் கான் 40 ரன் (18 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), வெஸ் ஏகார் (0) இருவரும் கடைசி 2 பந்தில் அடுத்தடுத்து ரன் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.


Tags : win ,Rashid Khan , Thunder Thrill, win , 3 runs, Rashid Khan's ,action in vain
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்