×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: குமரி திமுகவினர் வீடுகளில் கோலம்

நாகர்கோவில்: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. மற்றும் திமுகவினர் வீடுகளில் இன்று கோலமிட்டு இருந்தனர். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் வேண்டாம் சிஏஏ (குடியுரிமை திருத்த சட்டம்), வேண்டாம் என்.ஆர்.சி. (தேசிய பதிவேடு சட்டம்) என்ற வாசகங்களுடன் கோலமிட்ட 5 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சட்டங்களை கண்டித்து திமுக சார்பில் கோலம் போராட்டம் நடத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இல்லம், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லம் ஆகியவற்றின் முன் சிஏஏ, என்ஆர்சி சட்டத்துக்கு எதிராக கோலம் போடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் வீடுகள் முன், இந்த சட்டங்களை கண்டித்து கோலமிட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் ராமவர்மபுரத்தில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வீடு உள்ளது. அவரது வீட்டில் இன்று காலை சிஏஏ, என்.ஆர்.சி. சட்டங்களை கண்டித்து கோலம் போடப்பட்டு இருந்தது. இதே  போல் ஒழுகினசேரியில் உள்ள திமுக மாவட்ட அலுவலக வாசலிலும் கோலம் போட்டு இருந்தனர். திமுக மகளிர் தொண்டரணி மாநில செயலாளரும்,  முன்னாள் எம்.பி.யுமான ஹெலன்டேவிட்சன் வீடு முன் கோலம் போடப்பட்டு இருந்தது. இதே போல் திமுக நிர்வாகிகள் பலரின் வீடுகள் முன்பும், இந்த சட்டங்களை கண்டித்து கோலம் போடப்பட்டு இருந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Citizenship
× RELATED பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை...