×

அரூரில் சாலையோரங்களில் விவசாய கருவிகள் தயாரிப்பு பணி தீவிரம்

அரூர்: அரூர் சாலையோரங்களில் விவசாய கருவிகள் தயாரித்து விற்பனை செய்யும் பணியில், உத்திரபிரதேச தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2மாதமாக பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாய கருவிகள் விற்பனையும் தீவிரமாக நடந்து வருகிறது. அரூர் கச்சேரிமேட்டில், உத்தரபிரதேச தொழிலாளர்கள் கூடாரம் அமைத்து குடும்பத்துடன் தங்கி, பழைய இரும்பு பட்டைகளை வாங்கி விவசாய கருவிகள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதில், மண் வெட்டி, கோடாரி, அரிவாள், கலப்பை, களை வெட்டும் களைவெட்டி, நிலத்தை உழவு செய்யும் கலப்பைக்கு தேவையான கொலு, கொடுவாள், வெட்டருவாள், கறிக் கடைக்கு தேவையான கத்திகள், கதிர் அறுக்கும் அரிவாள், கடப்பாரை, கோடாரி, சம்மட்டி, இரும்பு புட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் தேவைக்கேற்ப உடனடியாக தயாரித்து தருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான விதங்களில் விதவிதமாக செய்து ரூ100 முதல் ரூ700 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

Tags : Aurora ,route , Outil, agricoles
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...