×

2020ம் ஆண்டு செவ்வாய்க்கு அனுப்பவுள்ள ரோவர் ரோபோவின் படத்தை வெளியிட்டுள்ளது நாசா

நாசா விண்வெளி ஆய்வு மையமானது 2020 ஆம் ஆண்டில் புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது. இந்நிலையில் குறித்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர் ஆனது செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஏலியன்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பதிலாக மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் ஆராயவுள்ளது. அதாவது செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

லொஸ் ஏஞ்சலிற்கு அருகிலுள்ள Pasadena எனம் இடத்திலுள்ள Jet Propulsion ஆய்வுகூடத்தில் குறித்த ரோவர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 23 கமெராக்கள், 2 ஒலிவாங்கிகள் என்பன இணைக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்காவின் ஐந்தாவது ரோவர் ரோபோவாக விண்வெளிக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags : Mars ,NASA , 2020, Mars, Rover Robot, NASA
× RELATED திருமணத்துக்குத் தடையாகும் செவ்வாய் தோஷம்