×

பிறந்தது 2020 புத்தாண்டு.. உலகிலேயே முதலாவதாக புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து

வெல்லிங்டன் : உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2020-ம்  ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.உலகின் நேரக்கணக்கின்படி நியூசிலாந்தில்தான் முதல் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்ததும் மக்கள் ஒருவொருக்கு ஒருவர் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனையும் நடந்தது.

புத்தாண்டு பிறந்ததையொட்டி, நியூசிலாந்தின் ஆக்லாந்து, கிறிஸ்ட்சர்ச் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், பார்களில் புத்தாண்டைக் கொண்டாட சிறப்பு நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு பிறந்ததையொட்டி மக்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  புத்தாண்டு பிறந்தவுடன் ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவரில் வானவேடிக்கை வெடித்து கொண்டாடினார்கள்.  லேசர் நிகழ்ச்சிகள் மூலம் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.அடுத்த சில மணிநேரங்களில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளதால், மக்கள் புத்தாண்டை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags : New Zealand ,world , New Zealand, Born, 2020, New Year, Australia
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...