×

அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக 5 காலி இடங்கள் ரெடி: உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு உ.பி அரசு அனுப்பியுள்ளதாக தகவல்

லக்னோ: அயோத்தியில், மசூதி கட்டுவதற்கு வழங்க, 5 காலி இடங்களை உத்தர பிரதேச அரசு தேர்வு செய்து வைத்துள்ளது. நாடு முழுவதும் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.அதன்படி  அயோத்தியில்  இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு  உத்தரவிட்டுள்ளது. மேலும்  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் உருவாக்க மத்திய  அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மத்திய, மாநில அரசுகளால்  வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு கட்சி தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர், சம்சுதின்பூர், சாந்த்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 காலி இடங்களை மாநில அரசு தேர்வு  செய்துள்ளது. 15 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிக்கு வெளியில் இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவ்விபரங்கள் மத்திய உள்துறை  அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் யாவும், நெடுஞ்சாலை பகுதிக்கு  அருகிலேயே அமைந்துள்ளதால், இஸ்லாமியர்கள் மிக எளிதாக பயணித்து, மசூதிக்கு செல்லமுடியும் என உத்தரபிரதேச அரசு வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

Tags : Ayodhya Ayodhya , 5 vacant seats ready for mosque in Ayodhya
× RELATED மெரினா கடற்கரை அருகே அயோத்யா நகரில்...