×

தமிழகத்தில் ஜல்லிக்கட்டி புரட்சிபோல் உருமாறும் கோலப்புரட்சி : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வீதிகள் தோறும் கோலமயம்

சென்னை : குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீதிகள் தோறும் மக்கள் கோலம் வரைந்து வருகின்றனர். தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் என அனைத்து தரப்பினரும் வாசல்களில் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நெய்விளக்கு தோப்பு என்ற இடத்தில் தங்கள் வீடுகளின் வாசலில் பெண்கள் கோலமிட்டனர். அதில்  குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான வாசகங்களை எழுதி  அவர்கள் தங்களை எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் வரை பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை காட்டப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாகர்கோவிலில் திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜன் தனது வீட்டு வாசலில் கோலமிட்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான வாசகங்களை எழுதினார். சென்னை பெசன்ட் நகரில் 2 நாட்களுக்கு முன்பு  குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோலமிட்ட பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் வீடு, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரின் வீட்டு வாசல்களில் எதிர்ப்பு கோலங்கள் வரையப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த கோலப்போராட்டம் பரவி வருகிறது. 


Tags : revolution ,streets ,Gopalapuram ,Tamil Nadu ,state , Citizenship Law Amendment, Goal, Struggle, Glossary
× RELATED வாக்களிப்பின் ரகசியத்தை காத்த...