×

இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருநெல்வேலி:  திருநெல்வேலியை சேர்ந்த இலக்கிய பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நெல்லை கண்ணன் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கடந்த 29-ஆம் தேதி பங்கேற்றார்.  அந்த நிகழ்வில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும்  ஒருமையில் பேசியதோடு அவர்கள் இருவரையும் கொலை செய்ய தூண்டும் வகையிலும் நெல்லை கண்ணன் பேசுவது போன்ற காணொளி இணையதளத்தில் வைரலானது. இது பல்வேறுத் தரப்பிலும் அதிர்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உள்ளான நிலையில் நெல்லை கண்ணனுக்கு எதிராக பாஜகா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது இரண்டு சமூகங்களுக்கிடையே மோதல் உருவாகி அதன் மூலம் கலவரத்தை உருவாக்க முயல்வது, இரண்டு மதங்களுக்கிடையே தேவையற்ற ஆதாரமற்ற தகவல்களை பரப்பி மத மோதல்களை உருவாக்குவது உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  ஆனால் இதுவரை அவரை கைது  செய்யவில்லை என கூறி பாஜகா-வினர் நெல்லை கண்ணன் வீடு முன்பு கூடி போராட்டத்தில் ஈடுப்பட முயன்றனர். இதனையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மேலும் அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Paddy Kannan ,speaker , Literary speaker, Paddy Kannan, case record
× RELATED ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட...