×

சேந்தமங்கலம் பகுதியில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பகுதியில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளி, அலங்காநத்தம், பவித்திரம், முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் குண்டுமல்லி, சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை, அரளி உள்ளிட்ட பூச்செடிகளை பயிரிட்டுள்ளனர். தற்போது அலங்காநத்தம் அடுத்த கோம்பைக்காடு, காரவள்ளி ஆகிய பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் சாமந்தி பூக்களை நடவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கொல்லிமலை பகுதியில் நல்ல மழை பெய்ததால் சாமந்தி பூக்கள் விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் கணிசமாக விலை உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சாமந்தி பூக்கள் ஆடி மாதத்தில் நடவு செய்யப்பட்டது. நல்ல மழை பெய்ததால் ஆரம்பத்திலிருந்தே பூ விளைச்சல் அதிகரித்து வருகிறது. ஐயப்பன் கோயில் சீசன் பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகும்,’ என்றனர்.


Tags : sandamangalam area , Sandamangalam, marigold flower, yield
× RELATED பெரம்பலூரில் விஜய மெட்டல் மார்ட் நிறுவன கிடங்கில் தீ விபத்து