×

அடிப்படை வசதி இல்லாத வழுத்தூர் கிராமம்: பொதுமக்கள் அவதி

பாபநாசம்: பாபநாசம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் கிராமம் உள்ளது. இந்த ஊரில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வரி வருவாய் அதிகமிருந்தும் இந்த ஊரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த ஊரில் உள்ள சின்ன தெருவுக்கு செல்கிற வழியில் உள்ள குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து செல்கிற கிளை வாய்க்காலின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் சேதமடைந்து காணப்படுகிறது.

இந்த பாலத்தை இடித்து புதிதாக கட்ட வேண்டும் என்பது தான் அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கமாலுதீன் பைஜி கூறுகையில், இந்த பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். சின்ன தெருவுக்கு செல்கிற வழியில் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிகிற கிளை வாய்க்காலின் மீது கட்டப்பட்டுள்ள சிறு பாலமானது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் பாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்றார்.

Tags : village ,Valdur ,avadi , Infrastructure, Valuttur Village, Public
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...