×

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்திய முழுவதும் பல இடங்களில் போராட்டம்: சமாஜ்வாதி கட்சி சார்பில் சைக்கிள் பேரணி

லக்னோ: குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து உத்திரபிரேதசத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் தொடங்கி மாநில சட்டமன்றம் நோக்கி பேரணி நடைபெறுகிறது. லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சக்கிள் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளர்.

வி.சி.க போராட்டம்:
குடியுரிமை சட்டதிருத்தத்தை கண்டிக்கும் வகையில் புத்தாண்டுக் கொண்டாட போவதில்லை என திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். மார்கழி மாதம் முழுவதும் வி.சி.க. கட்சி தொண்டர்கள் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் தனது இல்லத்தின் வாயிலில் திருமாவளவன் கோலம் போடுகிறார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டு முன் கோலமிட்டு குடியுரிமை சட்டத்திற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் பேரணி:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இஸ்லாமியர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கிண்டியில் இருந்து ஆலந்தூர் வரை ஏராளமான இஸ்லாமியர்கள் பேரணியாக செல்கின்றனர். குடியரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை ஒபுளாபடித்துறை சந்திப்பில் நடைபெறும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருவண்ணாமலையில் இஸ்லாமியர் பேரணி:
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருவண்ணாமலையில்  இஸ்லாமியர் 5000 பேர் பேரணி நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையின் முக்கிய வீதிகள் வழியாக தேசியக் கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்று அண்ணாசிலை எதிரே இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கேரளா எதிர்ப்பு:
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படாது என முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியுள்ள  குடியுரிமை திருதத சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.  இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட மேற்குவங்கம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் கேரள மாநிலங்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

Tags : Samajwadi Party ,protests , Citizenship Act, Samajwadi Party, Bicycle Rally
× RELATED விவசாய கடன் தள்ளுபடி: சமாஜ்வாடி தேர்தல் அறிக்கையில் உறுதி