×

தேன்கனிக்கோட்டையில் பருவநிலை மாற்றத்தால் பூ விளைச்சல் பாதிப்பு

தேன்கனிக்கோட்டை:  பருவநிலை மாற்றத்தால், தேன்கனிக்கோட்டையில் பூ விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது. தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், சொட்டுநீர் பாசன முறையில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வடகிழக்கு மழையால், செடிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டு இழைகள் உதிர்ந்தும், பூக்கள் விளைச்சல் குறைந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து, கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், ரோஜா செடிகளில் இதழ்கள் வாடி விழுந்து, பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், ‘பனி பொழிவால் எவ்வளவு மருந்து அடித்தாலும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்கல் வரை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படும். அதன்பிறகு தான் நோய் தாக்குதல் குறையும். தற்போது பூக்களின் தரம் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது,’ என்றனர்.

Tags : Harvesting effect of thekkanikottai, flower and yield
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு