×

ஆடுவதை கூடத்தை பயன்படுத்தாமல் கடைகளில் வெட்டப்படும் நோய் பாதித்த ஆடுகள்: பொதுமக்கள் புகார்

கீழக்கரை: கீழக்கரையில் ரூ.35 லட்சம் செலவில் ஆடுவதை கூடம் கட்டி முடிக்கப்பட்டும், நோய்வாய் பட்ட ஆடுகளை கடைகளில் வெட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகவே நகராட்சி அதிகாரிகள் ஆடுகளை ஆடுவதை கூடத்தில் வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரையில் 20க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடைகள் உள்ளது. இதில் தினமும் தலா 10 முதல் 20 ஆடுகள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக வெள்ளி கிழமையில் தலா 30 முதல் 50 ஆடுகள் வரை வெட்டப்படுகிறது. இந்த ஆடுகளை ஆடுவதை செய்யும் கூடத்திற்கு கொண்டு சென்று மருத்துவர் பரிசோதனை செய்த பிறகே அறுத்து இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும். அதற்காகவே நகராட்சி நிர்வாகம் ரூ.35 லட்சம் செலவில் ஆடுவதை செய்யும் கூடம் கட்டி வைத்துள்ளது.

ஆனால் கீழக்கரையில் சில ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் ஆடுவதை கூடத்திற்கு ஆடுகளை கொண்டு செல்லாமல் கடைகளிலேயே வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். ஆடுவதை கூடத்தை குத்தகைக்கு எடுத்தவர் வாரத்தில் ஒருநாள் மட்டும் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று பணத்தை மொத்தமாக வசூல் செய்கின்றார். இதனால் நோய்வாய் பட்ட ஆடுகளையும், விபத்தில் இறந்த ஆடுகளையும் சில கடைக்காரர்கள் அறுத்து விற்பனை செய்து விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகவே நகராட்சி அதிகாரிகள் அனைத்து ஆட்டு இறைச்சி கடைக்காரர்களையும் ஆடுவதை செய்யும் கூடத்தில் வைத்து ஆடுகளை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கீழக்கரையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நகராட்சி நிர்வாகம் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆடுவதை கூடத்தை ஆடு அறுப்பதற்கு பயன்படுத்தாமல் குப்பை தொட்டி வைப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் கொஞ்மும் பயமில்லாமல் நோய்வாய் பட்ட ஆடுகளை அறுத்து வியாபாரம் செய்கின்றனர். இதை தடுப்பதற்கு நகராட்சி அதிகாரிகள் தினமும் காலையில் ஒவ்வொரு கடைகளாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆடுகளை கண்டிப்பாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : stores ,hall , Shop, infected goats, complain public
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...