×

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியது,..டெல்லி வாசிகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

டெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியதால் டெல்லி வாசிகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றின் தரம் மிகவும் மோசமாகவுள்ளது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. ஆனந்த் விகாரில் காற்று மாசின் அளவு 431 புள்ளிகளாக உள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலை என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. ஆர்.கே.புரத்தில் காற்று மாசின் அளவு 372 புள்ளகளானது. 0-50 புள்ளிகள் வரை மாசு இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க தகுதியான காற்றாக மதிப்பிடப்படுகிறது.

50-100 புள்ளிகள் வரை காற்று மாசு இருந்தால் ஓரளவுக்கு பரவாயில்லை என்று  மதிப்பிடப்படுகிறது. ஆனால் காற்றின் மாசு 201-300 புள்ளிகள் இருந்தால் அது மோசமான நிலையாகும். 301-400 புள்ளிகள் வரை காற்று மாசு இருந்தால் மிகவும் மோசமான நிலையாகும். 401 புள்ளிகளுக்கு மேல் சென்றால் காற்று மிகவும் மோசமானது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காற்றின் மாசுவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகையாக பிரித்துள்ளது. ஏற்னவே சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வரும் டெல்லி வாசிகள் தற்போது மிகபெரிய சவாலை சந்தித்து வருகின்றனர்.

Tags : Delhi ,residents , Delhi, Air Pollution, Anand Vikar, Pollution Control Board
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...