×

விஸ்டன் டி20 அணியில் கோஹ்லி, பூம்ரா தேர்வு

லண்டன்: விஸ்டன் இதழ் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள கடந்த 10 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த டி20 அணியில் இந்தியாவின் விராத் கோஹ்லி, ஜஸ்பிரித் பூம்ரா இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான இந்த அணியில் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி, தொடக்க வீரர் ரோகித் ஷர்மா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. விஸ்டன் டெஸ்ட் அணி மற்றும் கடந்த 10 ஆண்டுகளின் தலைசிறந்த 5 வீரர்கள் பட்டியலிலும் கோஹ்லி இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஸ்டன் டி20 அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கோலின் மன்றோ, விராத் கோஹ்லி, ஷேன் வாட்சன், கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ் பட்லர், முகமது நபி, டேவிட் வில்லி, ரஷித் கான், ஜஸ்பிரித் பூம்ரா, லசித் மலிங்கா.


Tags : Kohli ,Boomra ,squad , Whiston T20, Kohli, Boomra
× RELATED அதிமுக, பாஜவினரிடம் ₹1.76 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி