×

யு-19 ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி

ஈஸ்ட் லண்டன்: தென் ஆப்ரிக்கா யு-19 அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா யு-19 அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஐசிசி இளைஞர் உலக கோப்பை போட்டித் தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக தென் ஆப்ரிக்க யு-19 அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி மோதியது. முதல் 2 போட்டிகளிலும் இந்தியா யு-19 அணி அபாரமாக வென்று முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா யு-19 அணி முதலில் பந்துவீச, இந்தியா யு-19 அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. கேப்டன் பிரியம் கார்க் அதிகபட்சமாக 52 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா யு-19 அணி 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய ஜொனாதன் பேர்டு ஆட்டமிழக்காமல் 88 ரன் (121 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். இந்தியா யு-19 அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Tags : India , India , U-19 ODI series
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!