×

ஜன. 8ல் அகில இந்திய வேலை நிறுத்தம் மின்வாரிய தொழிலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்பு : தொமுச பொதுச்செயலாளர் ரத்தினசபாபதி அறிவிப்பு

சென்னை: வரும் ஜனவரி 8ம் தேதி நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில், மின்வாரிய தொழிலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என மின்கழக தொமுச பொதுச் செயலாளர் சிங்கார.ரத்தினசபாபதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அகில இந்திய வேலை நிறுத்தம் மத்திய தொழிற்சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஜ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, எச்.எம்.எஸ், எல்.பி.எப் என பத்து சங்கங்கள் சென்ற ெசப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஜனவரி 8ம் தேதி வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தொமுசவுடன் சேர்ந்து, மற்ற சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்தியில் ஆட்சி செய்து வருகிற மோடி அரசு அதற்கு அடிபணிகின்ற அரசாக அதிமுக அரசு தொடாந்து தொழிலாளர் விரோத நடவடிக்கைளை எடுத்து வருகிறது.  

குறிப்பாக  மின்சார சட்டம் 2018 அமல்படுத்தி தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதை கைவிட வேண்டும். 44 தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி 4 சட்ட தொகுப்புகளாக மாற்றம் செய்துள்ளது.  மின்வாரியத்தில் 19,000க்கு மேற்பட்ட காலிபணியிடமாக உள்ள களப்பணி உதவியாளர் பதவிகளை ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : All India Strike: 8th Anniversary Strike of Power Workers ,India ,Strike ,Power workers , All India Strike,Power workers,officials participate , 8th Anniversary strike
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை