×

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் விசாரணையை துவக்கியது சிபிஐ : அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்பு

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐ நேற்று தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்கு பிறகு பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். மன அழுத்தம் காரணமாக பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டதாக விடுதியின் காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிறகு, பாத்திமா லத்தீப் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் மகள் தற்கொலைக்கு முன்பு 3 பேராசிரியர்கள் குறித்து கடிதம் எழுதி வைத்திருப்பாக கூறி பரபரப்பாக குற்றம் சாட்டினார். இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மாணவி பாத்திமா லத்தீப் தந்தை அப்துல் லத்தீப் மகள் மரணத்தில் எங்களுக்கு 13 சந்தேகங்கள் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதைதொடர்ந்து தமிழக டிஜிபி திரிபாதி அறிவுறுத்தலின் படி ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்த வழக்கை தமிழக அரசு கடந்த 15ம் தேதி சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றி 15 நட்களாக ஆன நிலையில் சிபிஐ எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ ேநற்று தனது விசாரணையை தொடங்கி உள்ளது. கடந்த 2006 முதல் ஐஐடியில் படித்து வந்த 14 ேபர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே சிபிஐ விசாரணை முடிவில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Fatima Latif ,IIT ,investigation ,suicide investigation , IIT student Fatima Latif ,suicide investigation
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ்...