×

துருக்கி அரசின் சோதனையில் ஐஎஸ் தீவிரவாதிகள் 100 பேர் கைது

இஸ்தான்புல்: துருக்கி அரசு நடத்திய அதிரடி சோதனையில், ஐஎஸ் தீவிரவாதிகள் என  சந்தேகிக்கப்படும் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல், கடந்த 8  ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இதில் ஐஎஸ் தீவிரவாதிகளை  எதிர்த்து அரசுக்கு ஆதரவாக  ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளும், குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவாக  அமெரிக்காவும் உள்நாட்டு போரில் களமிறங்கின. அமெரிக்காவின் ஆதரவுடன்  குர்திஷ் போராளிகள் ஐஎஸ் தீவிரவாதிகளை விரட்டினர். இதனால் சமீபகாலமாக  அங்கு போர் ஓய்ந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்கா தனது படைகளை வாபஸ்   பெற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் திடீரென அறிவித்தார். இதனால், குர்து  படைகளுக்கு தந்த ஆதரவை அமெரிக்கா விலக்கிக் கொண்டது. இந்நிலையில்,  6 மாகாணங்களில் துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில்  வெளிநாடுகளைச் சேர்ந்த 100 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது. இவர்களை அவர்களது தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவது குறித்து துருக்கி அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : militants ,ISIS ,Turkey , The Turkish government, IS militants, arrested 100 people
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரம்: இசை...