×

டிரம்ப்புக்கு புடின் நன்றி

மாஸ்கோ: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் புத்தாண்டு தினத்தன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தீவிரவாத தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா உதவியதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், `‘அமெரிக்கா அளித்த தகவலின் அடிப்படையில், ரஷ்ய பாதுகாப்பு படையினர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தீவிரவாத தாக்குதல் நடத்த இருந்ததாக சந்தேகிக்கும் 2 ரஷ்ய தீவிரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தாக்குதல் நடத்துவதற்காக வைத்திருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகவல் அமெரிக்காவின் மத்திய பாதுகாப்பு படையினர் மூலம் ரஷ்ய உளவுப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Putin ,Trump , Putin ,Trump
× RELATED இந்தியாவுடன் இணைந்து கொரோனா...