×

துபாய், இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய பெண் உட்பட 3 பேர் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: துபாய், இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வந்த பெண் உட்பட மூன்று பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.துபாயிலிருந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஏர் இண்டியா விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த தாட்சாயிணி (28) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்றுவிட்டு திரும்பி வந்திருந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன் தாட்சாயிணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அவரது உள்ளாடையில் தங்க செயின்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை 238 கிராம், மற்றும் அதன் மதிப்பு ₹9 லட்சம் என தெரியவந்தது.

இதேபோல், இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் இலங்கையை சேர்ந்த ஹவவா சலாகே (33), விஜயவீரா (28) ஆகிய இருவரும் சுற்றுலா பயணிகள் விசாவில் இலங்கை சென்றுவிட்டு வந்திருந்தனர். அவர்கள் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன்சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை அதிகாரிகள் மீண்டும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர். இரண்டு பேரின் உடலின் ஆசனவாயுக்குள் 7 சிறு சிறு பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதில், 920 கிராம் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ₹36 லட்சம் என தெரியவந்தது. இதனையடுத்து சுங்க அதிகாரிகள், பெண் உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : smugglers ,Dubai Three ,Sri Lanka ,Dubai , Three arrested in Dubai, Sri Lanka
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்