×

வேலை வாய்ப்பு முகாம்

சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (பொறுப்பு) வே.விஷ்ணு வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வருகிற 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.  இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 1000க்கும் மேற்பட்ட பணிகாலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Tags : Placement Camp , Placement Camp
× RELATED அம்பேத்கர் கலை கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம்