×

சாலையில் திரும்பியபோது சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து: போக்குவரத்து கடும் பாதிப்பு

பெரம்பூர்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் (55). இவர், ராஜஸ்தானில் லாரியில் 25 டன் மரப்பலகை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டார். நேற்று அதிகாலை 3 மணியளவில் வியாசர்பாடி மகாகவி பாரதிநகர், ஆதிபராசக்தி கோயில் அருகே வந்தபோது, சாலை வளைவில் லாரியை வலதுபுறமாக திருப்பியுள்ளார்.அப்போது, எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியனில் மோதி லாரி நின்றது. லாரியில் அதிகளவு லோடு இருந்ததால் பின்னால் எடுக்க முடியவில்லை. அதிகாலையில் சம்பவம் நடந்ததால் யாருக்கும் உயிர் சேதம் இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போக்குவரத்து எஸ்ஐக்கள் ஜபேந்திரன், பூபதி கண்ணன் ஆகியோர் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்த முயன்றனர்.

லாரி சென்டர் மீடியனில் சிக்கிக்கொண்டதால் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை வெளியில் எடுக்க முயன்றபோது சேதமானது. இதையடுத்து, 2 ராட்சத கிரேன் மூலம் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் மீனாம்பாள் சாலை வழியாகவும், வியாசர்பாடி வழியாகவும் திருப்பிவிடப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Tags : collision ,road , Center Median, truck collision accident, traffic
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு